"Education is the most powerful weapon which you can use to change the world.”

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் III உத்தியோகத்தர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைக்கான பாடத்திட்டம்

பரீட்சைக்கான பாடத்திட்டம்

01. பொது நிர்வாகம் 
(03 மணித்தியாலங்கள், 100 புள்ளிகள்)

(அ) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு மற்றும் அதற்கு முன்னராக இருந்த 1972 மற்றும் 1947ம் ஆண்டு அரசியலமைப்புக்கள்
    • சிறுவர் உரிமைகள் பிரகடனம்
    • மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டம்
    • இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணைகள் ஆணைக்குழுச் சட்டம்

(ஆ) அலுவகத்தின் மற்றும் கள ஒழுங்கமைப்பு முறைகள் மற்றும் தாபன விதிக்கோவையின் பின்வரும் அத்தியாயங்கள் (காலத்திற்கு காலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் உட்படலாக) VII, IX, X, XVI, XXV, XXVI, XXVII, XXIX, XXXI, XXXII, XLVII, XLVIII

(இ) அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் நடைமுறை ஒழுங்கு விதிகள் கோவை

02. நிதிப் பிரமாணக் குறிப்புக்கள் 
(03 மணித்தியாலங்கள், 100 புள்ளிகள்)

(அ) அரச நிதிப் பிரமாணக் குறிப்பு (I ஆம் அத்தியாயம் தவிர்த்து/காலத்திற்கு காலம் செய்யப்பட்ட திருத்தங்கள் உட்படலாக)

(ஆ) தொடர் வருடத்திற்கான வருமானம் மற்றும் செலவு மதிப்பீடுகள். உதா.: அவற்றின் கட்டமைப்பு, வருமானத் தலைப்பு, நிதி மற்றும் பாதீட்டுச் சட்டங்கள்

(இ) கல்வி அலுவலகங்களூடாக மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட கணக்குசார் செயற்பாடுகளுக்குரிய கட்டளைச் சட்டங்கள் மற்றும் ஏனைய சட்டங்கள் மற்றும் பிரகடனங்கள்

03. கல்விச் சட்டம், நிர்வாகம் மற்றும் மதிப்பீடு
(03 மணித்தியாலங்கள், 100 புள்ளிகள்)

(அ) கல்விக்குரிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் 
    • 1939 ஆம் ஆண்டின் இலக்கம் 31 உடைய கல்விக் கட்டளைச் சட்டம் 
    • 1947 ஆம் ஆண்டின் இலக்கம் 26 உடைய திருத்தச் சட்டம் 
    • 1951 ஆம் ஆண்டின் இலக்கம் 05 உடைய திருத்தச் சட்டம் 
    • 1953 ஆம் ஆண்டின் இலக்கம் 43 உடைய திருத்தச் சட்டம் 
    • அரச பாடசாலைகள் தொடர்பான பிரமாணக் குறிப்பு 
    • 1960 ஆம் ஆண்டின் இலக்கம் 05 உடைய உதவி பெறும் பாடசாலைகள் மற்றும் ஆசிரியர் கல்லூரிகள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தம் செய்யப்பட்ட சட்டம் 
    • 1961 ஆம் ஆண்டின் இலக்கம் 08 உடைய உதவி பெறும் பாடசாலைகள் மற்றும் ஆசிரியர் கல்லூரிகள் (மேலதிக ஏற்பாடுகள்) சட்டம் 
    • 1973 ஆம் ஆண்டின் இலக்கம் 35 உடைய (பதவிப் பெயர்களில் மாற்றம் செய்தல்) சட்டம் 
    • 1981 ஆம் ஆண்டின் இலக்கம் 65 உடைய உதவி பெறும் பாடசாலைகள் மற்றும் ஆசிரியர் கல்லூரிகள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தம் செய்யப்பட்ட சட்டம் 
    • 1985 ஆம் ஆண்டின் இலக்கம் 28 உடைய தேசிய கல்வி நிறுவக சட்டம் 
    • 1968 ஆம் ஆண்டின் இலக்கம் 25 உடைய பொதுப் பரீட்சைகள் சட்டம் 
    • 1986 ஆம் ஆண்டின் இலக்கம் 30 உடைய கல்வியியல் கல்லூரிச் சட்டம் 
    • தேசிய கல்வி ஆணைக்குழுவின் அறிக்கை (பரீட்சைக்கு அண்மித்த மூன்று வருடங்களுக்குரிய) 
    • வசதிகள் மற்றும் சேவைகள் கட்டணம் 
    • பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கங்களுக்குரிய சுற்றுநிருபங்கள்

(ஆ) கல்வி நிர்வாகம் 
    1. (i) கல்வி அமைச்சு 
        (ii) மாகாணக் கல்வித் திணைக்களங்கள் உட்படலாக அமைச்சின் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் கல்வி அமைச்சின் ஒழுங்கமைப்பு மற்றும் பணிகள் 
         (iii) தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் கல்விசார் திட்டமிடல் மற்றும் பொதுக் குறிக்கோள்களை (பாடசாலை அமைப்பு உட்படலாக) நடைமுறைப்படுத்தல் போன்றன 
    2. பாடசாலை முகாமைத்துவம் மற்றும் பாடசாலை சமூகத் தொடர்புகள் 
    3. கல்வி முகாமைத்துவ தகவல் முறைமை (EMIS) 
    4. விசேட கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள், முறைசாரா கல்விச் செயற் பாடுகள், பாடசாலைமைய முகாமைத்துவம் 

(இ) மதிப்பீடு 
    • ஆசிரியர்களது செயல்திறன் மதிப்பீட்டுக்காக பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் 
    • பாடசாலை அடிப்படையிலான மதிப்பீடு 
    • பாடசாலைகளில் சுய மதிப்பீட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் 
    • வலயக் கல்வி அலுவலகங்கள், மாகாணக் கல்வித் திணைக்களங்கள் மற்றும் கல்வி அமைச்சினூடாக பாடசாலைகளை மேற்பார்வை செய்தல். 
    • வெளிவாரி குழுக்களால் உள்ளக மதிப்பீடுகளை மேற்பார்வை செய்தல் (கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள கையேடுகள் மற்றும் ஏனைய வெளியீடுகள் தொடர்பில் சிறந்த புரிதலை பெற்றுக் கொள்ளுமாறு பரீட்சார்த்திகளுக்கு ஆலோசனை வழங்கப்படுகின்றது)

இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை வினாத்தாள்

Post a Comment

0 Comments

a