"Education is the most powerful weapon which you can use to change the world.”

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் II உத்தியோகத்தர்களுக்கான இரண்டாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைக்கான பாடத்திட்டம்


பரீட்சைக்கான பாடத்திட்டம்
 
1. கல்விக் கொள்கைகள் 
(காலம் 02 மணித்தியாலங்கள், 100 புள்ளிகள்)

இவ்வினாப் பத்திரம் இரண்டு பகுதிகளை கொண்டிருக்கும். 

(அ) பொதுக் கல்விக் கொள்கை

அரசினால் வெளியிடப்பட்ட தற்கால கல்வி வெளியீடுகள் தொடர்பில் பரீட்சார்த்தியின் அறிவை பரிசோதிப்பதற்காக வினாப் பத்திரம் தயாரிக்கப்படும். 
கொள்கைகளின் மூலம் வெளியிடப்பட்டுள்ள மாற்றங்கள் மூலம் தமது கடமைகளை நிறைவேற்றும் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் பரீட்சார்த்திகளின்அறிவைப்பரிசோதிப்பதுஇதனூடாக எதிர்பார்க்கப்படுகின்றது. 

(ஆ) பாடசாலைக் கலைத்திட்டம் 

பாடசாலை முறைமையில் பல்வேறு கட்டங்களின் கலைத்திட்டம் சார் துறைகள் தொடர்பிலும் கலைத்திட்டத்தின் பிரதான குறிக்கோள் தொடர்பிலும் பரீட்சார்த்தியின் புரிதலை பரீட்சித்தல், பாடசாலைகளில் மனித மற்றும் பௌதீக வளங்கள் போன்றன தொடர்பில் பரீட்சார்த்திகளிடம் சிறந்த புரிதல் காணப்படவேண்டும் என்பதுடன் அக் கோணத்தில் கலைத்திட்டம் தொடர்பில் விமர்சன ரீதியாக கருத்துக்களை முன்வைக்க முடியுமாக இருத்தல் வேண்டும்.

2. விடயம்சார் கற்கை 
(காலம் 02 மணித்தியாலங்கள், 100 புள்ளிகள்)

பரீட்சார்த்தியின் படைப்பாற்றல் மற்றும் தர்க்க ரீதியான சிந்தனை ஆற்றல் மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் போன்றனவற்றைப் பரிசோதிப்பதற்காக தயாரிக்கப்படும் வினாப் பத்திரமாகும்.




இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை வினாத்தாள்

Post a Comment

0 Comments

a