"Education is the most powerful weapon which you can use to change the world.”

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரங்களுக்கு பதவியுயர்த்தல்

SLEAS தரம் III இலிருந்து தரம் II இற்கு பதவியுயர்த்தல்

பூர்த்தி செய்திருக்கவேண்டிய தகைமைகள்

  • பதவியுயர்வு பெறுவதற்கான தகைமை பெறும் திகதிக்கு தரம் III இல் ஆகக் குறைந்தது ஆறு வருட (06) செயலூக்கமுள்ள மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்தை பூரணப்படுத்தியிருத்தல் மற்றும் ஆறு (06) சம்பள ஏற்றங்களை உழைத்திருத்தல்.
  • I வது வினைத்திறன் காண் தடைப் பரீட்சையில் உரிய தினத்தில் சித்தியெய்தியிருத்தல் வேண்டும்.
  • உரிய மட்டத்திற்குரிய மற்றைய அரசகரும மொழியில் தேர்ச்சியைப் (அரச கரும மொழித் தேர்ச்சி - சிங்களம் மட்டம் I) பெற்றிருத்தல் வேண்டும்.
  • இணைப்பு மொழியில் (இலங்கை கல்வி நிர்வாக சேவையின் III ஆம் தரத்திற்குரிய இணைப்பு மொழி - ஆங்கிலம்தேர்ச்சியைப் பெற்றிருத்தல் அல்லது விலக்களிக்கப்பட்டிருத்தல் (கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சா/த)ப் பரீட்சை - ஆங்கில மொழியில் ஆகக் குறைந்தது திறமை சித்தி (C - CREDIT PASS) )வேண்டும்.
  • கல்வி முகாமைத்துவமும் நிருவாகமும் தொடர்பான திறன் விருத்திப் பயிற்சிப் பாடநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
  • பட்டப்பின் படிப்பு கல்வி டிப்ளோமாவில் (PGDE) சித்தியெய்தியிருத்தல் வேண்டும்.
  • தரம் III இல் பதவி நிரந்தரமாக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
  • பதவியுயர்வுத் திகதிக்கு கிட்டிய ஐந்து (05) வருடங்களுக்குள்ளும் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
  • அனுமதிக்கப்பட்ட செயலாற்றுகை மதிப்பீட்டுத் திட்டத்திற்கு அமைய பதவி உயர்வு வழங்கப்படும் திகதிக்கு உடன் முன்னரான ஆறு (06) வருட காலத்தில் திருப்திகரமான மட்டத்தில் அல்லது அதற்கு மேலான செயலாற்றுகையை காண்பித்திருத்தல் .
குறிப்பு :
விசேட பதவியணியின் கீழ் நியமனம் பெற்ற உத்தியோகத்தர்களை, தரம் II இற்குப் பதவியுயர்த்தும் போது, அவர்கள் விசேட பதவியணியின் கீழேயே பதவியுயர்த்தப்படுவர்.


SLEAS தரம் II இலிருந்து தரம் I இற்கு பதவியுயர்த்தல்

பூர்த்தி செய்திருக்கவேண்டிய தகைமைகள்

  • இலங்கை கல்வி நிருவாக சேவையின் தரம் II இல் ஆகக் குறைந்தது ஆறு வருட (06) செயலூக்கமுள்ள மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூரணப்படுத்தியிருத்தல் மற்றும் ஆறு (06) சம்பள ஏற்றங்களை உழைத்திருத்தல்.
  • உரிய திகதிக்கு II வது வினைத்திறன் காண் தடைப் பரீட்சையில் சித்தியெய்தியிருத்தல் வேண்டும்.
  • உரிய திகதிக்கு திறன் விருத்திப் பயிற்சிப் பாடநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
  • பதவியுயர்வுக்குத் தகைமை பெறுவதற்கு, கிட்டிய ஐந்து (05) வருட காலப்பகுதியிலும் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
  • அனுமதிக்கப்பட்ட செயலாற்றுகை மதிப்பீட்டுத் திட்டத்திற்கு அமைய பதவி உயர்வு வழங்கப்படும் திகதிக்கு உடன் முன்னரான ஆறு (06) வருட காலத்தில் திருப்திகரமான மட்டத்தில் அல்லது அதற்கு மேலான செயலாற்றுகையை காண்பித்திருத்தல்.
  • பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து அல்லது பட்டம் அளிப்பதற்கான நிறுவனமொன்றாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனமொன்றிலிருந்து, கீழே குறிப்பில் காட்டப்பட்டுள்ள கல்வித் துறையுடன் தொடர்புடைய பாடங்களுள் ஏதேனுமொரு பாடத்திற்குரிய விடயப் பரப்பில் பட்டப்பின் படிப்புப் பட்டம் (MASTER DEGREE) பெற்றிருத்தல் அல்லது ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பாடப் பரப்பிற்குரியதாக பட்டப் பின் படிப்புப் பட்டம் (MASTER DEGREE) பெற்றிருத்தல்.
குறிப்பு :
பொதுவான பதவியணியின் கீழ் சேவையில் இணைந்த உத்தியோகத்தர்களுக்காக விசேட கல்வி, கல்வி முகாமைத்துவம், கல்வி உளவியல், கல்விக் கொள்கைகள், மூன்றாம் நிலைக் கல்வி முகாமைத்துவம், நூலகம் மற்றும் தகவல் கல்வி, கல்வித் துறையில் மதிப்பீடும் பரீட்சையும் ஆகிய விடயப் பரப்புகள் உரிய விடயப் பரப்புகளாகும்.


SLEAS தரம் 1 இலிருந்து விசேட தரத்திற்கு பதவியுயர்த்தல்

பூர்த்தி செய்திருக்கவேண்டிய தகைமைகள்

  • பதவியுயர்வுக்காக தகைமைகளை பெறுகின்ற தினத்திற்கு நிறைவேற்று சேவை முதலாவது தரத்தில் ஐந்து (05) வருட தொடர்ச்சியான திருப்திகரமான சேவைக் காலத்தினைப் பூர்த்தி செய்திருப்பதுடன் முதலாம் தரத்தில் பதவியுயர்வு பெற்றதன் பின் சம்பள ஏற்றங்கள் ஐந்தினைப் (05) பெற்றிருத்தல்.
  • உரிய திகதிக்கு III வது வினைத்திறன் காண் தடைப் பரீட்சையில் சித்தியெய்தியிருத்தல் வேண்டும்.
  • பதவியுயர்வுக்குத் தகைமை பெறுவதற்கு, கிட்டிய ஐந்து (05) வருட காலப்பகுதியில் திருப்திகரமான சேவையையும் எந்தவொரு ஒழுக்காற்றுத் தண்டனைக்கும் உட்படாதவராக இருத்தல் வேண்டும்.
  • பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து அல்லது பட்டம் அளிப்பதற்கான நிறுவனமொன்றாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனமொன்றிலிருந்து, கீழே குறிப்பில் காட்டப்பட்டுள்ள கல்வித் துறையுடன் தொடர்புடைய பாடங்களுள் ஏதேனுமொரு பாடத்திற்குரிய விடயப் பரப்பில் பட்டப்பின் படிப்புப் பட்டம் (MASTER DEGREE) பெற்றிருத்தல் அல்லது ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பாடப் பரப்பிற்குரியதாக பட்டப்பின் படிப்புப் பட்டம் (MASTER DEGREE) பெற்றிருத்தல் வேண்டும்.
  • பதவியுயர்வுக்காக தகைமைகள் பெறுகின்ற தினத்தில் நிறைவேற்றுத் தரத்தில் பதினெட்டு (18) ஆண்டுகள் சேவை புரிந்திருத்தல் வேண்டும்.
  • உரிய திகதிக்கு திறன் விருத்திப் பயிற்சிப் பாடநெறியை வெற்றிகரமாப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
  • பதவியுயர்வுக்கான தகைமை பெறுகின்ற தினத்தில் முன்னதான ஐந்து (05) ஆண்டினுள் வருடாந்த செயலாற்றுகையினை திருப்திகரமாக அல்லது உயர் மட்டத்தில் பேணுதல்.
குறிப்பு :
பொதுவான பதவியணியின் கீழ் சேவையில் இணைந்த உத்தியோகத்தர்களுக்காக விசேட கல்வி, கல்வி முகாமைத்துவம், கல்வி உளவியல், கல்விக் கொள்கைகள், மூன்றாம் நிலைக் கல்வி முகாமைத்துவம், நூலகம் மற்றும் தகவல் கல்வி, கல்வித் துறையில் மதிப்பீடும் பரீட்சையும் ஆகிய விடயப் பரப்புகள் உரிய விடயப் பரப்புகளாகும்.


Updated

Post a Comment

0 Comments

a