1. Connected Papers ஒரு குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரையுடன் தொடர்புடைய ஏனைய ஆய்வுகளை ஒரு வலைப்பின்னல் (Network Graph) போலக் காட்சிப்படுத்தும். இது ஒரு துறையில் உள்ள முக்கிய ஆய்வுகளைக் கண்டறிய உதவும்.
2. ResearchRabbit ஒரு கட்டுரையை நீங்கள் சேர்த்தால், அது தொடர்பான நூற்றுக்கணக்கான ஏனைய கட்டுரைகளை வரைபட வடிவில் காட்டும்.
3. Elicit இலக்கிய மீளாய்வு (Literature Review) பணியை எளிதாக்கும். பல கட்டுரைகளை ஒரே நேரத்தில் பகுப்பாய்வு செய்து, அவற்றின் முறையியல் (Methodology) மற்றும் கண்டுபிடிப்புகளைத் தனித்தனியாகப் பிரித்துக் காட்டும்.
4. Semantic Scholar ஒரு இலவச ஆய்வுத் தேடுபொறியாகும், இது மில்லியன் கணக்கான ஆய்வுக் கட்டுரைகளின் முக்கிய சாராம்சத்தை வழங்குவதோடு அவற்றின் மேற்கோள் செல்வாக்கையும் (Citation Influence) துல்லியமாகப் பகுப்பாய்வு செய்ய உதவுகிறது.
5. Scite ஒரு ஆய்வுக் கட்டுரை மற்ற ஆய்வாளர்களால் எவ்வாறு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது (ஆதரிக்கப்படுகிறதா அல்லது எதிர்க்கப்படுகிறதா) என்பதைத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்து வழங்குகிறது.
6. QuillBot ஒரு வாக்கியத்தின் கருப்பொருள் மாறாமல் அதன் சொற்களையும் அமைப்பையும் மாற்றி அமைப்பதன் மூலம் (Paraphrasing) கருத்துத் திருட்டைத் (Plagiarism) தவிர்க்கவும் எழுத்து நடையை மேம்படுத்தவும் உதவுகிறது.
7. Scribbr ஆய்வுக் கட்டுரைகளில் உள்ள கருத்துத் திருட்டை (Plagiarism) கண்டறியவும், பிழையற்ற மேற்கோள்களை (APA/MLA Citations) உருவாக்கவும் மற்றும் இலக்கணத் திருத்தங்களைச் செய்யவும் உதவுகிறது.
8. Jenni AI ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் ஆய்வேடுகளை எழுதும் போது பொருத்தமான கல்விசார் மேற்கோள்களை (Citations) தானாகவே பரிந்துரைப்பதோடு உள்ளடக்கங்களை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் உதவுகிறது.
9. DeepL Translator கூகுள் மொழிபெயர்ப்பை விட மிகவும் துல்லியமாக உத்தியோகபூர்வ சொற்களைப் பயன்படுத்தி மொழிபெயர்க்க உதவும். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கோ அல்லது சிங்களத்திற்கோ மொழிபெயர்க்கச் சிறந்தது.
10. NotebookLM அறிக்கைகளைப் பகுப்பாய்வு செய்தல், ஒலிவடிவக் கலந்துரையாடல், ஆதாரங்களைச் சுட்டிக்காட்டுதல், சுருக்கம் தயாரித்தல், குறிப்புகளை ஒழுங்குபடுத்தல்
11. Claude.ai நேர்காணல்கள் (Interviews) அல்லது பண்புசார் ஆய்வுகளின் (Qualitative Research) எழுத்து வடிவங்களைப் பகுப்பாய்வு செய்து, அதிலுள்ள முக்கிய கருப்பொருள்களை (Themes) இனங்காண இது சிறந்தது.
12. Perplexity AI நம்பகமான இணையதளங்களில் இருந்து தகவல்களைத் தேடி, மேற்கோள்களுடன் கூடிய பதில்களை அளித்தல்.
MR. V.KRISHNARAJA. MEd, MEd, MCom, PGDEM, PGDE, BBA, HNDIT, DSM Justice of Peace (Whole Island) External Lecturer – BEd (National Institute of Education - Regional Study Centre) Acting Deputy Director of Education (Education Planning) SLEAS III Zonal Education Office, Mullaitivu, Sri Lanka.
0 Comments